உலகம்

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காதலியை சந்தித்த காதலன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

மீண்டும் தன்னை விட்டு தனது காதலி பிரிந்து சென்று விடுவாலோ என்ற அச்சத்தில் தூங்கி கொண்டிருந்த காதலியின் வயிற்றில் கத்தியால் குத்திய காதலனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமஸ் லங் என்ற மருத்துவர் ஒருவர் மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது மௌரின் போய்ஸ் என்ற மருத்துவ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன் பின் கடந்த 1980 ஆம் ஆண்டு மௌரின், தாமஸை கைகழுவி விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மிகுந்த சோகத்திற்கு ஆளான தாமஸ் தனது காதலி போலவே இருக்கும் வேறு ஒரு பெண்ணை தேடி அழைத்துள்ளார்.

ஆனால் தாமஸ்க்கு அப்படி ஒரு பெண் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் 2013 ஆம் ஆண்டு மௌரினை பார்த்துள்ளார். அதன்பின் இருவரும் பிரிந்த காதலை புதுப்பித்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மௌரினுக்கு திருமணம் ஆகி இருந்த நிலையிலும் காதல் கண்ணை மறைக்க தாமஸ் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் மௌரின் மொபைல் போனுக்கு ஆண் நபர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவலை தாமஸ் பார்த்துள்ளார். எங்கே இரண்டாம் முறையாக தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்று துரோகம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் தூங்கி கொண்டிருந்த காதலியின் வயிற்றில் கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார்.

அதன்பின் தாமஸ் போலீசிற்கு போன் செய்து மௌரின் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பிறகு தாமஸ் தான் மௌரினை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 


Advertisement