2 ஆண்டுகளாக தேடியும் சடலம் கிடைக்கல...! ஆனால் கணவன் தான் கொலையாளி..? குழந்தை நல செவிலியரின் மர்ம மரணம் .... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!



mamta-kafle-murder-trial-jury-selection

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் 2024-ம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போன குழந்தை நல செவிலியர் மம்தா காஃப்லே வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கணவர் நரேஷ் பட் மீது நடைபெறும் கொலை வழக்குக்கான நடுவர் குழு (ஜூரி) தேர்வு அக்டோபர் 5, 2026 அன்று தொடங்கியது.

மம்தா காணாமல் போனது தொடர்பான விசாரணையில், அவரது வீட்டில் கிடைத்த ரத்தக்கறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் அரசுத் தரப்பின் கவனத்தை ஈர்த்தன. குற்றச்சாட்டுகளை மறுக்கும் நரேஷ் பட், தான் குற்றமற்றவர் என தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! பூங்கா கழிவறையில் கட்டாயப்படுத்தி 19 வயது வாலிபருக்கு போதைபொருளை வாயில் ஊத்தி... ஊசி போட்டுக்கொலை...? வீடியோ ஆதாரத்தை அழிக்க சொன்ன போலீஸ் அதிகாரி! கொடூர வீடியோ...!!!

பணிக்கு வராததால் தொடங்கிய தேடுதல்

வர்ஜீனியாவின் மனசாஸ் பார்க் பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த 28 வயதான மம்தா, 2024 ஆகஸ்ட் தொடக்கத்தில் திடீரென காணாமல் போனார். அவர் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆகஸ்ட் 2-ம் தேதி மம்தாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸாரிடம், அவரது கணவர் நரேஷ் பட், மம்தா நியூயார்க் அல்லது டெக்சாஸ் செல்ல திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார். மேலும், அவர் தனது செல்போனை உடைத்துச் சென்றதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்ததாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் மனைவி காணாமல் போனதாக புகார் அளிக்க அவர் மறுத்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 5-ம் தேதி புகார் அளித்தார்.

வீட்டில் கிடைத்த ஆதாரங்கள்; கணவர் கைது

விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் நரேஷ் பட் கைது செய்யப்பட்டார். அவர் மீது முதல் நிலை கொலை, சடலத்தை மறைத்தல், சடலத்தை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மம்தா வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது உடல் பாகங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரத்தக்கறைகள் மம்தாவுடையது என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கையில் பிடிக்கும் மின்சார ரம்பம், வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க அரசுத் தரப்பு தயாராகி வருகிறது. எனினும், மம்தாவின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என்பது வழக்கின் முக்கிய அம்சமாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ஜூரி தேர்வு

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நரேஷ் பட் மறுத்துள்ளார். சடலம் கிடைக்காத நிலையில் கொலை வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால், இந்த வழக்கு வர்ஜீனியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மம்தா காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அக்டோபர் 5, 2026 முதல் வழக்குக்கான ஜூரி தேர்வு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக பதிலுக்காக காத்திருக்கும் மம்தாவின் குடும்பத்தினர், நீதிமன்ற விசாரணையின் முடிவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பல ஆண்டுக்கு முன்பு காணாம் போன போன சிறுமி.! சாலை ஓரத்தில் நின்று... நொடிப் பொழுதில் பிளந்த பூமி! அடியோடு புதைந்த 2 கார்கள்... நடுரோட்டில் நடந்தது என்ன? திகைக்க வைக்கும் வீடியோ..!!!