BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தீபாவளி மரண வெடி விளையாட்டு! ஓடும் காரில் பட படவென வெடித்து சிதறிய பட்டாசுகள்! அதிர்ச்சி வீடியோ....
தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை பாதுகாப்புடன் அனுபவிக்க வேண்டும் என்பதே பல நிபுணர்களின் வேண்டுகோள். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில நேரங்களில் பொறுப்பில்லாத செயல்களை முன்னிறுத்தி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
ஓடும் காரில் ஆபத்தான பட்டாசு வெடிப்பு
லக்னோவில் நடந்த ஆபத்தான சாகசம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. திங்கள்கிழமை இரவு, சௌக் பகுதியில் கே.ஜி.எம்.யூ டிராமா சென்டர் அருகில் ஓடும் வெள்ளை நிற காரின் ஜன்னல்களில் இருந்து பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி பரவி வருகிறது. காரின் கூரையிலும் பட்டாசுகள் வைத்து தொடர்ச்சியாக வெடிப்பது காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு மீறல் குறித்து கடும் கண்டனம்
இந்த செயல், காரில் இருந்தவர்களின் உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக இருந்தது. வீடியோ வெளிவந்ததுடன் பல நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அல்ப புத்தி! பட்டப்பகலில் பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து! காமக்கொடூரனின் வெறிச்செயல்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
போலீசார் விசாரணை தொடக்கம்
சம்பவத்தை கவனத்தில் எடுத்த லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். “போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல் நிலையம் இணைந்து சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்டவுடன் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு சமூக பொறுப்புடன் கொண்டாட்டங்களை முன்னெடுத்து, உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதே தற்போதைய பொதுமக்கள் வேண்டுகோளாக மாறியுள்ளது.
ये वो नमूने हैं..जो स्वयं की जान जोखिम में तो डाल ही रहे..अन्य राहगीरों/वाहनों के लिए..बन जाते हैं..काल..🙄..@UPPViralCheck
..प्राप्त जानकारी के अनुसार कल दीवाली की रात..चौक क्षेत्र के ट्रामा सेंटर के सामने..बीच सड़क..चलती कार से दाग रहे थे…पटाखे..😡
“सदैव सेवा में तत्पर” रहने… pic.twitter.com/LMZTbViCA7— Vivek Sharma (@Lko_VivekSharma) October 21, 2025
இதையும் படிங்க: டோல்கேட்டில் நின்று கொண்டிருந்த லாரி! திடீரென லாரி டயர் வெடித்து சிதறி பூத் கண்ணாடி... நொடியில் நடந்த பகீர் காட்சி....