தாறுமாறாக அதிவேகத்தில் வந்த பென்ஸ் கார்.. திரைப்பட பாணியில் பயங்கர விபத்து.. 7 பேருக்கு நேர்ந்த சோகம்.!

தாறுமாறாக அதிவேகத்தில் வந்த பென்ஸ் கார்.. திரைப்பட பாணியில் பயங்கர விபத்து.. 7 பேருக்கு நேர்ந்த சோகம்.!



Karnataka Bangalore Benz Car Makes Accident 1 Died 6 More Injured

தறிகெட்டு இயங்கிய பென்ஸ் கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், இந்திரா நகர் பகுதியில் நேற்று அதிவேகத்துடன் வந்த பென்ஸ் காரொன்று, தனது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. 

பின்னர், ஓட்டுநர் காருடன் தப்பி செல்ல மீயுயர்ச்சித்த நிலையில், மீண்டும் பிற வாகனங்கள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், பென்ஸ் காரை இயக்கி வந்த சுவீத் கார்டியோ (வயது 46) பலத்த காயம் அடைந்தார். 

karnataka

இவ்விபத்தில், மற்றொரு கார் ஓட்டுநர் ஹரிமஹந்தா (வயது 36) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.