மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....
இது புதுசா இருக்கே.. சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர்! பாட்டு பாடிய எச்சரித்த காவலர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ...

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு காவலர் நடத்திய எச்சரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் நடந்தது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சாதாரண சாலையில், போலீஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த பகவத் பிரசாத் பாண்டே என்ற காவலரால்.
அந்த நேரத்தில், ஒரு ஆட்டோ ரிக்ஷா கண்ணாடி இல்லாமல் சாலையில் வந்தது. அதைக் கண்டு காவலர் பாண்டே, “நீங்கள் கடந்த ஒரு மாதத்தில் 3வது முறையாக மாட்டிக்கொண்டீர்கள். கண்ணாடி இல்லாமல் ஓட்டுவது தவறு,” என பாட்டு பாடி கேள்வி எழுப்பினார். இது பார்ப்பவர்களை அசரவைக்கும் வகையில் இருந்தது. அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்கத்துடன், “கண்ணாடியை மாற்ற குவாலியர் செல்ல வேண்டும், அது 120 கிமீ தூரத்தில் உள்ளது,” என பதிலளித்தார்.
இதற்குப் பதிலளிக்க பாண்டே, 'பர்சாத்ல்' திரைப்படத்தின் ஹம்கோ சிர்ஃப் தும்சே பாடலை எச்சரிக்கை பார்வையில் பாடினார். இந்த தனித்துவமான அணுகுமுறை, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் காவலரின் பாணியை பாராட்டி வருகிறார்கள். இது போல மென்மையான மற்றும் மனித நேயமான முறையில் விதிகளை உணர்த்துவது, சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: வீட்டின் ஹாலில் தோரணம் போல் சிவப்பு பெராரி காரை தொங்கவிட்ட தொழிலதிபர்! எப்படி இருக்குன்னு நீங்களே வீடியோவில் பாருங்க..
இந்த வீடியோவுக்கு தற்போது 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. காவலர் பாண்டேவின் இந்த செயல், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரி ஏற்படுகிறது.
இதையும் படிங்க: Video: பைக்கை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு! இறுதியில் பாம்பு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ!