சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
எனக்கு பிடிக்காத நடிகை லைலாதான்.. ஓப்பனாக உடைத்த பிரபல நடிகர்!! இதுதான் காரணமா??
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை லைலா.அதனை தொடர்ந்து அவர் சூர்யா, பிரபுதேவா,விக்ரம், அஜித் என பல நடிர்களின் படங்களில் நடித்து பிரபலமாக வலம்
வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
எப்பொழுதும் துருதுருவென இருக்கும் அவரை ரசிகர்கள் சிரிப்பழகி, கன்னக்குழியழகி என அழைப்பர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்தில் கூட அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை லைலா குறித்து நடிகர் ஷ்யாம் கூறியது வைரலாகி வருகிறது.

நடிகர் ஷ்யாம் பேட்டி ஒன்றில், எனக்கு பிடிக்காத நடிகை லைலா என்று சொல்லலாம். உள்ளம் கேட்குதே படத்தில் லைலாவிற்கு ஒரு மாதிரி எப்பொழுதும் தொந்தரவு செய்யும் கதாபாத்திரம். அதனால் அவர் படம் முழுக்க என்னை சுற்றியே டார்ச்சர் செய்து கொண்டிருப்பார். அதுவே ஒரு கட்டத்தில் ஐயோ.. இனி அவருடன் நடிக்கவே கூடாது என தோணவைத்தது. ஆனால் நிஜத்தில் லைலா மிகவும் ஜாலியான ஆள். நல்ல மனம் கொண்டவர் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 8 வயது சிறுவன் ஏமாத்திட்டான்.! அடையார் சிக்னலில் நடந்த ஷாக் சம்பவம்.! குமுறிய நடிகை நிவேதா பெத்துராஜ்!!
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சூர்யா படத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!