எல்லாம் எனக்கு எதிரான சதி.! தன் மீது பாய்ந்த வழக்கு.! விளக்கமளித்த நடிகை ஸ்வேதா மேனன்!!



Shweta menon and talk about case filed against her

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மேனன் நடிப்பில் உருவாக்கியுள்ள கரம் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகவுள்ளது. இவர் தமிழ் மற்றும் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சி காவல் நிலையத்தில் அவர் பண ஆதாயத்திற்காக ஆபாசமான படங்களில் , விளம்பரங்களில் நடிப்பதாக புகார் அளித்துள்ளார். மேலும் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Shweta Menon

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் அம்மா (AMMA) தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். இந்நிலையில் எனக்கு எதிராகவே ஒரு தரப்பினர் இந்த சதியை திட்டமிட்டு செய்துள்ளனர். அதனாலேயே இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. இதனை நான் சட்டப்படி சந்திக்க உள்ளேன். எனக்கான தன்னிலை விளக்கம் கொடுத்து என் மீது என்ற குற்றமும் இல்லை என நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு.! உண்மையை உடைத்து விளக்கமளித்த மக்கள் செல்வன்!!

இதையும் படிங்க: பணத்திற்காக இப்படியா?? பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு.! திரையுலகம் அதிர்ச்சி!!