பணத்திற்காக இப்படியா?? பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு.! திரையுலகம் அதிர்ச்சி!!



Case filed against actress Shweta Menon

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வேதா மேனன். அவரது நடிப்பில் வெளிவந்த ரதிநிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் படங்கள்  வரவேற்பு பெற்று அவரும் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் ஸ்வேதா மேனன் நடிப்பில் உருவாக்கியுள்ள கரம் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.

Shweta Menon

மேலும் இவர் தமிழ் மற்றும் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது அவர் பண ஆதாயத்திற்காக ஆபாசமான படங்களில், விளம்பரங்களில் நடிப்பதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தொடரும் விவாகரத்து பஞ்சாயத்து.! மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகாரளித்த ஜெயம் ரவி!!

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தொடரும் விவாகரத்து பஞ்சாயத்து.! மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகாரளித்த ஜெயம் ரவி!!