தொடரும் விவாகரத்து பஞ்சாயத்து.! மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகாரளித்த ஜெயம் ரவி!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அயன் மற்றும் ஆரவ் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. மேலும் ஆர்த்தி, ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், எனது ஒப்புதல் இல்லாமலும் வெளியிடப்பட்டது என குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் கொடுத்த புகாரில் சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள ஆர்த்தியின் வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "The New Me" - விவாகரத்துக்கு பின் புதிய ஆளாக மாறிய ஜெயம் ரவி?.. அவரே கூறிய பதிவு.!
இதையும் படிங்க: "The New Me" - விவாகரத்துக்கு பின் புதிய ஆளாக மாறிய ஜெயம் ரவி?.. அவரே கூறிய பதிவு.!