கூலி ரிலீசுக்கு முன் செம கூலாக பேடல் விளையாடிய அனிருத்.! அதுவும் யாருடன் பார்த்தீங்களா.! ட்ரெண்டாகும் புகைப்படம்!!



Anirudh play with dhoni photo viral

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. தலைவரின் 121 வது படமான இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பேடல் விளையாட்டு மையம் 

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு வாரங்களே இருக்கும் நிலையில் அனிருத் கிரிக்கெட் வீரர் தல தோனியுடன் கூலாக பேடல் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
சென்னை அடுத்த பாலவாக்கத்தில் பேடல் விளையாட்டு மையத்தை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.! இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு!!

dhoni

 தல தோனி உடன் அனிருத் விளையாட்டு 

இந்நிலையில் அதனை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,
 மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். விளையாட்டு மையத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த ருத்துராஜ் மற்றும் அனிருத் இருவரும் தோனியுடன் இணைந்து பேடல்( paddle) ஆட்டத்தை ஆடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தின் கதை இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!