மருத்துவ மாணவிக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! ஃபர்ஸ்ட் ஏசி பெட்டியில் இப்படியா? நள்ளிரவில் நடுங்கி அலறிய மாணவி...போலீசை டேக் செய்து தாய் போட்ட பதிவு! இரவோடு இரவாக அதிரடி கைது!!!



sabarmati-express-1st-ac-harassment-arrest

ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதுகாப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஃபர்ஸ்ட் ஏசி பெட்டியிலேயே மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் ஏசி பெட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வாரணாசியிலிருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் மருத்துவ மாணவி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் பயணித்த அமித் சிங் யாதவ் என்ற நபர், மாணவியை மிரட்டி போதைப்பொருள் கலந்த உணவுப் பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் அத்துமீறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறான முறையில் பிடிக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அத்துமீறிய குடிபோதை திமிரு ! திடீரென ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை உதைத்துத் தள்ளிய குடிகாரர்! கொடூரச் சம்பவம்..!!!

அலறல் கேட்டு பயணிகள் உதவி

மாணவி உதவிக்காக அலறியதை கேட்டு அருகில் இருந்த பயணிகளும் ரயில் டிக்கெட் பரிசோதகரும் (TTE) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனால் பதற்றமடைந்த குற்றவாளி அங்கிருந்து விலகியுள்ளார். இந்தச் சம்பவத்தால் பயந்த மாணவி உடனடியாக தனது தாயைத் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் தாயார் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ரயில்வே துறை மற்றும் உத்தரப் பிரதேச போலீஸாரை டேக் செய்து, தனது மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

லக்னோவில் குற்றவாளி கைது

இந்த புகாரைத் தொடர்ந்து லக்னோ கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுத்தனர். ரயில் நள்ளிரவில் லக்னோ சார் பாக் ரயில் நிலையத்தை அடைந்ததும் அரசு ரயில்வே போலீஸார் அந்த பெட்டிக்குள் சென்று அமித் சிங் யாதவை கைது செய்தனர்.

காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி சிங் தலைமையிலான குழு மாணவியிடம் வாக்குமூலம் பெற்றது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படும் ஃபர்ஸ்ட் ஏசி பெட்டியிலேயே இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என்பதால், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் போலீஸ் கண்காணிப்பையும் ரோந்து பணிகளையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் வலுத்து வருகிறது.