Video : பட்டப் பகலில் கடைக்குள் துப்பாக்கியுடன் திருட வந்த நபர்! பெண் ஒருவரின் துணிச்சல் செயல்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! திக் திக் நிமிட சிசிடிவி காட்சி..



brave-woman-locks-thief-inside-shop

இணையத்தை அதிர வைத்திருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருடன் மற்றும் துணிச்சலான பெண் இடையே நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது.

காட்சியில், ஒரு துப்பாக்கியுடன் வந்த திருடன் கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த பெண்களை மிரட்ட முயல்கிறார். ஆனால் அந்தக் கடையில் இருந்த ஒரு துணிச்சலான பெண், பிற பெண்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி, உடனே கதவுகளை பூட்டி விடுகிறார்.

திருடன் கதவை திறக்க பலவிதமாக முயற்சி செய்கிறார். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு பயம் காட்டினாலும் கதவை திறக்க முடியவில்லை. பின் கதவை உடைக்கவும் முயன்றார். முடியாததால், வெளியே உள்ளவர்களிடம் உதவி கேட்டார், ஆனால் யாரும் உதவவில்லை.

இதையும் படிங்க: வீட்டின் ஹாலில் தோரணம் போல் சிவப்பு பெராரி காரை தொங்கவிட்ட தொழிலதிபர்! எப்படி இருக்குன்னு நீங்களே வீடியோவில் பாருங்க..

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாக பரவி, பலரும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ, நகைச்சுவையும், திடுக்கிடும் திருப்பமும் கொண்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: Video: பைக்கை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு! இறுதியில் பாம்பு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ!