வியாபாரியை திருடனாக நினைத்த ஜப்பானியர்.. உண்மை தெரிந்ததும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சி.!
தான் செய்த தவறுக்கு உடனடியாக பெண் கேட்ட மன்னிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களின் அறிமுகம் உலகளவில் புதிய பரிணாமத்தை உண்டாக்கி இருக்கிறது. பலரும் சோசியல் மீடியா பிரபலன்களாக இருப்பதால், வீடியோ எடுத்தபடி புதுப்புது நாடுகளுக்கு சென்று தங்களின் பயண அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறான பயணத்தின்போது, ஒருசிலருக்கு கசப்பான நிகழ்வுகளும் நடக்கின்றன. ஆனால், நாம் திரைப்படங்களில் பார்ப்பதை போல, அந்தந்த நாட்டுக்கு என தனித்துவ மக்களின் அடையாளமும், அன்பும் நிறைந்து இருக்கிறது.
மன்னிப்பு கேட்ட பெண்மணி:
இந்நிலையில், பெரு நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பெண் ஒருவர், பெருவில் சாலையில் வியாபாரம் செய்த நபர் ஒருவரை திருடன் அல்லது ஏமாற்றுகிறார் என எண்ணி இருக்கிறார். பின் அவர் உண்மையை அறிந்துகொண்ட நிலையில், பெண்மணி தனது செயலுக்கு வாதம் தெரிவித்து சாலையில் தனது நாட்டின் பாணியில் மனதார மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: இப்படி ஒரு அம்மாவா! எஸ்கலேட்டரில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு தாய் செய்த வேலையை பாருங்க! அதிர்ச்சி வீடியோ!
குவியும் பாராட்டு:
பொதுவாக ஜப்பான் நாடு என்றாலே ஒவ்வொரு விஷயத்திலும் உழைப்பு, தனித்துவ தன்மையுடன் அணுகுதல் என பல விஷயங்கள் பிரபலமாக பேசப்படும். தவறு செய்தால் மன்னிப்பு கேட்கும் அவர்களின் தன்மையான செயலையும் நாம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக நெட்டிசன்கள் பெருமிதம் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
பெண் மன்னிப்பு கேட்கும் வீடியோ:
Viral:
— China pulse 🇨🇳 (@Eng_china5) February 12, 2026
A young Japanese woman in Peru bowed and knelt before a street vendor to apologize after insulting him, having mistakenly thought he was a scammer. pic.twitter.com/GkVEb3q6Ap
இதையும் படிங்க: Emotional Video: முதல் முதலாக சொந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெற்றோர்.. இந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை..!