உலகம் Covid-19

அமெரிக்க வாழ் இந்திய மருத்துவருக்கு வித்தியாசமான முறையில் கௌரவம்! வைரலாகும் வீடியோ

Summary:

Indian doctor respected in america ahead of corono service

அமெரிக்காவில் கொரோனா வைரஸினை ஒழிக்க போராடும் இந்தியாவை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனன் என்பவருக்கு 100 வாகனங்களில் அணிவகுப்பு நடத்தி கௌரவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 25000க்கும் மேலானோர் பாதிக்கப்படுகின்றனர்.

அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ட்ரம்பின் அரசு திணறி வருகிறது. மருத்துவர்களும் மிகுந்த சேவை மனப்பான்மையுடன் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனன் என்பவர் அமெரிக்காவின் சௌத் வின்ஸ்டர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் திறம்பட பணியாற்றி வருகிறார். அவரது சேவையை பாராட்டி அந்நாட்டு அரசு வாகன அணிவகுப்பு மூலம் கௌரவம் செய்துள்ளது.

மருத்துவர் உமாவின் வீட்டிற்கு முன்பு 100 வாகனங்களில் வந்த வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவரும் வீட்டிற்கு வெளியில் நின்று கையசைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


Advertisement