இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்திய மருத்துவர்!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்திய மருத்துவர்!


india-doctor-dead-in-england-by-corono

சீனா வூஹானை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளிலும் அசுர வேகத்தில்   பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகின் பல பகுதிகளிலும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜிதேந்திர குமார் என்பவர் இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனோவால்  உயிரிழந்துள்ளார்.

 America
 இந்தியாவில் மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற ஜிதேந்திர குமார் ரத்தோட் என்பவர் இங்கிலாந்துக்குச் சென்று தேசிய சுகாதார சேவை பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய அறுவை
 சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கட்டிப் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் மருத்துவர் ஜிதேந்திர குமார் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் ஜிதேந்திர குமார் ரத்தோட் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். நோயாளிகளின் மீது அக்கறையுடன் இருப்பவர். அனைவரும் பெருமளவில் விரும்பும் அற்புதமான மனிதர் என கூறியுள்ளனர்.