7 வயது சிறுமியை கத்தியால் குத்திக்கொண்டு 13 வயது அக்கா.. பதறவைக்கும் சம்பவம்.!
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணம், டைலர் நகரில் தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தம்பதிகள் அவ்வப்போது பணி விஷயமாக வெளியே சென்றுவரும்போது, குழந்தைகளை கவனித்துக்கொள்ள மேற்பார்வையாளரை நியமித்துவிட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
சகோதரிகளிடையே வாக்குவாதம்
சம்பவத்தன்றும் வேலைக்காக வெளியே சென்ற தம்பதிகள், குழந்தைகளை கவனிக்க மேற்பார்வையாளரை நியமனம் செய்துள்ளனர். இரவு நேரத்தில் சகோதரிகள் இருவரும் வீட்டில் இருந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Israel Iran War: உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.. போரை தொடங்கியது ஈரான்... இஸ்ரேலில் பாய்ந்த 100+ ஏவுகணைகள்.!
அதாவது, 7 வயதுடைய சிறுமி கழிவறையை உபயோகம் செய்துவிட்டு, பின் மீண்டும் சரிவர சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம், 13 வயதுடைய சிறுமிக்கு கடுமையான ஆத்திரத்தை உண்டாக்கி இருக்கிறது.
சரமாரியாக குத்திக்கொலை
அப்போது, 13 வயது சிறுமி கத்தரிக்கோலை எடுத்து 7 வயது சகோதரியை கிட்டத்தட்ட 10 முறை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். குழந்தைகளை மேற்பார்வையிட வந்தநபர், இருவரையும் தடுக்க முயற்சிப்பதற்குள் சோகம் நடந்துள்ளது.
பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுமியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அரசின் அதிரடி முடிவு.!!