சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ரகசிய பேச்சுவார்த்தை.... தவெக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த முக்கிய கட்சிகள்...! அனல் பறக்கும் அரசியல்!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் தீவிரமாக மாறி வரும் நிலையில், நான்கு முனை போட்டி அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வலுவான பாதையை அமைக்க, வியூகங்கள் வேகமெடுத்து வருகின்றன.
நான்கு முனை போட்டி நிலவரம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முக்கிய அரசியல் அணிகள் நேரடியாக களமிறங்குகின்றன. இதில் திமுக, தங்களின் தற்போதைய கூட்டணியை உறுதியாக வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இனி இது தான் நடக்கும்! தவெக விஜய்யின் கூட்டணி...... அரசியலில் அடித்து பேசிய டிடிவி தினகரன்..!
எதிரணி கட்சிகளின் வியூகங்கள்
மறுபுறம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்த அரசியல் பாதையை பின்பற்றி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி கொண்டுள்ள இபிஎஸ் தலைமையிலான அதிமுக, மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது.
விஜயின் அரசியல் நகர்வு
இந்த அரசியல் சூழலில் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியதுடன், அவரை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது, விஜயின் அரசியல் பலத்தை மேலும் உயர்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடன் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், தேமுதிக மற்றும் பாமக (அன்புமணி தரப்பு) ஆகிய கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அவரது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கூட்டணி அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
இதையும் படிங்க: இனி இதுதான் நடக்கும்! NDA கூட்டணிக்கு தாவும் விஜய்.... சீக்ரெட்டை உடைத்த முக்கிய புள்ளி! அரசியலில் பரபரப்பு...!!!