16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அரசின் அதிரடி முடிவு.!!
உலகளவில் அதிகரித்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடு வயது வித்தியாசமின்றி ஒவ்வொரு தலைமுறையையும் மாறுபட்ட கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.
நேரத்தை வீணடிக்கும் இளம் தலைமுறையினர்
அதே சமயத்தில் இளம் தலைமுறையினர் செல்போன் பயன்பாடு காரணமாக தங்களது பொன்னான நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இயலாமல் செல்போனுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: 104 கிமீ வேகத்தில் அசுரத்தனமான காற்று; வியட்நாமை புரட்டியெடுத்த யாகி புயல்..!
சமூக வலைத்தளத்திற்கு தடை
இதனால் ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சில செயலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு முடிவு
அதன்படி ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமரின் விருப்பம்
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்றவற்றில் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ள அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் இத்தடையை விரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அமெரிக்காவா? தமிழ்நாடா?.. அமெரிக்காவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பில் இன்ப வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!