திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
#Breaking: குவைத்தில் 2 தமிழர்கள் உட்பட 3 பேர் மரணம்; குளிருக்கு தீ மூட்டி, கரும்புகையால் சோகம்.!

குளிருக்கு மூட்டிய தீயில் சிக்கி, 3 தமிழர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் குவைத்தில் நடந்துள்ளது.
குவைத் நாட்டில் வேலைக்காக சென்றிருந்த தமிழர்கள் 3 பேர், சம்பவத்தன்று உறங்கும்போது குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிய நிலையில், அனைவரும் உறங்கி இருக்கின்றனர். இதனால் அறைக்குள் கரும்புகை சூழ்ந்து ஏற்பட்ட புகை காரணமாக, மூவர் நச்சுப்புகை காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: துருக்கி ரிசார்ட்டில் பயங்கர தீ விபத்து; 66 பேர் உடல் கருகி மரணம்.!
கடலூரை சேர்ந்த 2 பேர் மரணம்
முதற்கட்ட தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை, கீழ வீதியில் வசித்து வரும் மர்ஹம் அப்துல் ஸலாம் என்பவரின் மூன்றாவது மகன் நஜீர் பாஷா முகமது ஜெமீலின் சகோதரர் முகம்மது ஜுனைத், மேலவீதி மஸ்ஜிதே நூர் ஜாமிஆ மஸ்ஜித் மல்ஹாவைச் சேர்ந்த பிச்சைக்கனியின் மகன் முகமது அப்பாஸ் என்பவரின் சகோதரர் முகம்மது யாசின் உயிரிழந்துள்ளனர்.
Fire | File Pic
உறக்கத்திலேயே பிரிந்த உயிர்
மூன்றாவது நபர் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தீ மூட்டியபடி அனைவரும் உறங்கிய காரணத்தால், அயர்ந்த உறக்கத்தில் மூவரின் உயிர் பிரிந்து இருக்கிறது. தீ எரிந்து கரும்புகை சூழ்ந்து, அறைக்குள் கார்பன் மோனைக்ஸைடு உண்டாகியது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலை அரசு மீட்டுகொண்டுவர நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 30 இலட்சம் தெருநாய்களை கொலை செய்ய மொராக்கோ அரசு திட்டம்? அதிர்ச்சியூட்டும் தகவல்.!