துருக்கி ரிசார்ட்டில் பயங்கர தீ விபத்து; 66 பேர் உடல் கருகி மரணம்.!



TUrkey Resort 66 Died 


துருக்கி நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போலு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள கற்தல்காயா ரிசார்ட், பிரபலமானது ஆகும். உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் அங்கு சென்று தங்கி இருக்கின்றனர். 

தீ விபத்து

இதனிடையே, சம்பவத்தன்று ரிசார்ட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 30 இலட்சம் தெருநாய்களை கொலை செய்ய மொராக்கோ அரசு திட்டம்? அதிர்ச்சியூட்டும் தகவல்.! 

66 பேர் மரணம்

இந்த தீ விபத்தில் சிக்கிய பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்த. மேலும், 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தீ விபத்திற்குள்ளாகிய ரிசார்ட்டில் மொத்தமாக 234 பேர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடருகின்றன. 

இதையும் படிங்க: 4 ஆண்டுகளாக 13 வயது சிறுவனை கற்பழித்து குழந்தை பெற்றெடுத்த ஆசிரியை; கணவருக்கு ஷாக் தந்த பகீர் சம்பவம்.!