30 இலட்சம் தெருநாய்களை கொலை செய்ய மொராக்கோ அரசு திட்டம்? அதிர்ச்சியூட்டும் தகவல்.! 



Morocco Govt Plans to Kill Dogs 


பீபா 2030 உலகக்கோப்பை போட்டிக்குள், சுமார் 30 இலட்சம் தெருநாய்களை கொலை செய்ய மொராக்கோ நாட்டின் அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரோக்கா அரசின் அறிவிப்பு உலகளவில் விலங்கின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி, கண்டனத்தை குவித்து இருக்கிறது. 

மனிதாபிமற்ற வகையில் தெருநாய்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறி வரும் விலங்குகள் நல ஆர்வலர்கள், இவ்வாறான செயலை அரசு கைவிட வேண்டும். அதிகாரிகள் நாய்களை சுட்டு வீழ்த்துவது, மண்வெட்டியால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

World news

மேலும், உள்ளூரில் விலங்குகள் தடுப்பு அமைப்புடன் சேர்ந்து, விலங்குகள் நல ஆர்வலர்களும் வரும் காலங்களில் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். பீபா நிர்வாகமும் அரசுக்கு விலங்குகளை வதைக்க கூடாது என கோரிக்கை முன்வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 4 ஆண்டுகளாக 13 வயது சிறுவனை கற்பழித்து குழந்தை பெற்றெடுத்த ஆசிரியை; கணவருக்கு ஷாக் தந்த பகீர் சம்பவம்.!

பீபா தரப்பில் தற்போது வரை எந்த விதமான விளக்கமும் இந்த விசயத்திற்கு வெளியிடப்படவில்லை. மேலும், மொரோக்கோ நாய்கள் தொடர்பான விஷத்தை கவனிப்பதாக விலங்குகள் நல ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இனப்பெருக்கம் முடிந்ததும் காலி.. கொசுவின் விந்தணுவை மாற்றி வெற்றிகண்ட ஆராய்ச்சியாளர்கள்.!