இனப்பெருக்கம் முடிந்ததும் காலி.. கொசுவின் விந்தணுவை மாற்றி வெற்றிகண்ட ஆராய்ச்சியாளர்கள்.!



  Genetically Modified mosquitoes with toxic semen kills females 

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மரபணு ரீதியாக ஆண் கொசுக்களை வடிவமைத்து பெண் கொசுக்களை நூதனமாக அழிக்கும் வழிமுறையை கையில் எடுத்து, அந்த ஆராய்ச்சியில் வெற்றி அடைந்துள்ளனர். 

அதாவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுவை உருவாக்கிய ஆராய்ச்சியாளராகள், அது பெண் கொசுவுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுவின் விந்தணுவில் விஷத்தை உருவாக்கி இருக்கின்றனர். 

தொடரும் ஆராய்ச்சி

இதனால் இனப்பெருக்க நடவடிக்கை முடிந்த பின்னர் பெண் கொசு சில மணிநேரங்களில் உயிரிழக்கிறது. இந்த தகவலை முதற்கட்டமாக உறுதி செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள், மேற்படி ஆராய்ச்சி நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: "டாக்டர் என் குழந்தையை காப்பாத்துங்க" - மூர்ச்சையான குட்டியை வாயில் கவ்வி மருத்துவமனைக்கு வந்த நாய்..!

மேலும், இந்த சோதனை முயற்சி செயல்படுத்தப்படும்போது கொசுக்களின் உற்பத்தி தடுக்கப்பட்டு, மலேரியா மற்றும் டெங்கு போன்ற கொசுக்களால் பரப்பப்படும் காய்ச்சல் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாடையுடன் வீதிகளில் வலம்வரும் ஆண்கள், பெண்கள்.. இது நோ ட்ரவுசர் கொண்டாட்டம்.!