"டாக்டர் என் குழந்தையை காப்பாத்துங்க" - மூர்ச்சையான குட்டியை வாயில் கவ்வி மருத்துவமனைக்கு வந்த நாய்..!



a Mother Dog Saves Baby Dog Life Went Vetnary Hospital 

 

பரிணாம வளர்ச்சியால் ஆறு அறிவை பெற்றுள்ள மனிதர்கள், எந்த நிலைக்கு சென்றாலும், தாய் என்ற நிலையில் இருக்கும்போது மிகவும் மாறுபட்ட செயல்பாடு, குணம் என இருப்பார்கள். ஏனெனில், தனது குழந்தைக்கு ஒன்று என்றால், தாயின் பாசம் எதையும் செய்யத் தொடங்கும்.

இந்நிலையில், நாய் ஒன்று தனது குட்டி மூர்ச்சையானதை கண்டு பரிதவித்து துடித்த நிலையில், அதனை காப்பாற்ற நேரடியாக கால்நடை மருத்துவமனைக்கு குட்டியை தூக்கி வந்து உதவி கேட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இதையும் படிங்க: உள்ளாடையுடன் வீதிகளில் வலம்வரும் ஆண்கள், பெண்கள்.. இது நோ ட்ரவுசர் கொண்டாட்டம்.!


 

அதாவது, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் பகுதியில், கால்நடை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று நாய் ஒன்று தனது மூர்ச்சையாகி கிடந்த குட்டியை தூக்கி வந்தது. மருத்துவர்களையும் அழைத்து. 

உடனடியாக வந்து பார்த்த மருத்துவர்கள், தாயின் செயல்பாடுகளை புரிந்துகொண்ட குட்டியை மீட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது குட்டி நலமுடன் இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக நடந்த இந்நிகழ்வின் காணொளி வெளியாகி இருக்கிறது. மருத்துவரின் செயலுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நாய் குழந்தையின் மகிழ்ச்சியாக இருக்கிறது

இதையும் படிங்க: முதலையின் வாயில் சிறுமியின் தலை; நெஞ்சை பதறவைக்கும் கொடூர மரணம்.!