BREAKING: அதிர்ச்சியில் ஸ்டாலின்! திமுக கூட்டணியில் இருந்து விலகினார்.... திமுக செயல்பாடுகள் மீது கடும் குற்றச்சாட்டு!!!
தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பும் வகையில் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தவர் தற்போது அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்திருப்பது, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
2021 தேர்தலில் திமுக வெற்றிக்கு ஆதரவு
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த பல காரணிகளில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனின் ஆதரவும் முக்கிய பங்காற்றியது. அந்த நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் வெளிப்படையாக குரல் கொடுத்திருந்தார்.
திமுக செயல்பாடுகள் மீது கடும் குற்றச்சாட்டு
ஆனால் தற்போது அவரது அரசியல் நிலைப்பாடு முற்றிலும் மாறியுள்ளது. திமுக அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு துரோகம் விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரபல கட்சி....? பரபரப்பில் அரசியல் களம்!
விவசாயிகளுக்கு எச்சரிக்கை
“திமுகவுக்கு வாக்களிப்பது என்பது விவசாயிகளின் தற்கொலைக்குச் சமம்” என்று கடுமையாக விமர்சித்த பி.ஆர். பாண்டியன், வரும் தேர்தலில் விவசாயிகள் இந்த ஆட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஒருகாலத்தில் திமுகவுக்கு ஆதரவளித்த விவசாய சங்கத் தலைவரே இன்று கட்சியின் தீவிர எதிர்ப்பாளராக மாறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலைமை, வரவிருக்கும் தேர்தல் அரசியலில் விவசாயிகள் வாக்கு எந்த திசையில் நகரும் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சியில் விஜய்! தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கட்சி.....அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசியல் வட்டாரதில் பரபரப்பு!!!