மாலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்.!



Avoid These Evening Foods To Reduce Heart Risk

மாலை நேரங்களில் பஜ்ஜி, சமோசா, போண்டா, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த உணவுகளில் அதிகளவில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat), உடலில் கெட்ட கொழுப்பின் (LDL) அளவை உயர்த்தி, இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

health tips

அதேபோல், மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகளை மாலை நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மாலை 6 மணிக்குப் பிறகு அதிகளவில் டீ, காபி போன்ற கஃபைன் (Caffeine) உள்ள பானங்களை அருந்துவது இரவு நேர தூக்கத்தை பாதிக்கக்கூடும்.

இதையும் படிங்க: இரவில் சீக்கிரமாக நிம்மதியான உறக்கத்தை பெற... இதோ ஈஸி டிப்ஸ்.!

மேலும், இரவு நேரங்களில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற கனமான இறைச்சி உணவுகளை அதிகமாக சாப்பிடுவது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட அல்லது அதிகமாக சமைக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அடிக்கடி உட்கொள்வதால் சில வகை புற்றுநோய் அபாயங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மாலை நேரங்களில் அவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது இவ்வளவு ஆபத்தா?! எந்த வயதில் கொடுக்கலாம்.?!