5 கணவர்களை விவாகரத்து செய்த பிரபல பிக்பாஸ் நடிகை.. ரூட்டு போடும் ரசிகர்கள்.!

5 கணவர்களை விவாகரத்து செய்த பிரபல பிக்பாஸ் நடிகை.. ரூட்டு போடும் ரசிகர்கள்.!



Hollywood Actress Pamela Anderson Divorce 5 th Husband

ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பமீலா ஆண்டர்சன் (வயது 54). இவர் பே வாட்ச் உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010 ஆம் வருடம் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். 

கடந்த 1995 ஆம் வருடம் இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், 3 வருடத்திற்கு பின்னர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

hollywood

பின்னர், கடந்த 2006 ஆம் வருடம் கிட் ராக் என்ற பாடகரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 2007 ஆம் வருடம் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை திருமணம் செய்தார். 

அவரை கடந்த 2008 ஆம் வருடம் விவாகரத்து செய்த நிலையில், கடந்த 2014 ஆம் வருடம் ரிக் சாலமனை மீண்டும் திருமணம் செய்து, ஒரு வருடத்திற்கு பின்னர் அவரை இரண்டாவது முறை விவாகரத்து செய்தார்.

hollywood

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துகொண்ட நிலையில், வெறும் 12 நாட்களில் விவாகரத்து பெற்றார். 

அதனைத்தொடர்ந்து, தனது பாதுகாவலரான டென் ஹேஹர்ஸ்ட் எனப்வரை காதலித்து வான்கூவர் தீவில் வைத்து திருமணம் செய்தவர், அவரையும் விவாகரத்து செய்துள்ளார்.