தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.. நொடியில் பாய்ந்த தந்தை.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..!
மகனுக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தந்தை செய்த காரியம் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தவறி விழுந்த குழந்தை:
Bangladesh Real-Life Hero Father: வங்கதேசம் நாட்டில் உள்ள கிஷோர்கன்ச், பைராபி ரயில் நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 28ம் தேதி தம்பதிகள் தங்களின் ஒன்றரை வயதுடைய கைக்குழந்தையுடன் வருகை தந்துள்ளனர். அப்போது, ரயில் வரும் நேரத்தில் குழந்தை தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: வியாபாரியை திருடனாக நினைத்த ஜப்பானியர்.. உண்மை தெரிந்ததும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சி.!
பதறிப்போன மக்கள்:
இதனால் ரயில் நிலையத்தில் இருந்த அனைவரும் பதறிப்போன நிலையில், குழந்தையின் தந்தை மகனை காக்க தண்டவாளத்தில் இறங்கி மகனை பிடித்தவாறு படுத்துக்கொண்டுள்ளார். இதனைக்கண்டு அங்கிருந்த அனைவரும் பதறிப்போயுள்ளனர்.

குவியும் பாராட்டுக்கள்:
பின் ரயில் சில நொடிகளில் கடந்து சென்றதும் குழந்தையும், அவரின் தந்தையையும் மக்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. மேலும், மகனை பாதுகாக்க தந்தை எடுத்த முடிவு பாராட்டுகளை குவித்து வருகிறது.
தாயின் தவிப்பும், பாசமும்:
ரயில் சென்றதும் குழந்தையின் தாய் முதல் நபராக இறங்கி மகனை மீட்டு, பின் கண்ணீருடன் கணவரை எதிர்நோக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நல்வாய்ப்பாக குழந்தை, அவரது தந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. தண்டவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே இருந்த இடைவெளி காரணமாக இருவரும் உயிர்தப்பி இருக்கின்றனர்.
பதற்றத்துடன் நெகிழவைக்கும் காட்சிகள்:
A father’s love knows no bounds! ❤️
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) April 29, 2026
At Bhairab Railway Station in Bangladesh, a dad risked his life by jumping in front of a speeding train to save his young son. This is true heroism and the ultimate parental sacrifice.
Real superheroes don’t wear capes… they become shields for… pic.twitter.com/El6Ys0U2E5
இதையும் படிங்க: சிகிரெட் பிடிக்க கூடாதுன்னு சொல்ற? சாவு.. இளம்பெண்ணுக்கு ரயிலில் நேர்ந்த சம்பவம்.. பகீர் காட்சிகள்.!