நடக்க முடியாமல் அவதிப்பட்ட பெண்!! ஸ்கேன் செய்தபோது தொடைப்பகுதியை கண்டு பேரதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!!
நடக்க முடியாமல் அவதிப்பட்ட பெண்!! ஸ்கேன் செய்தபோது தொடைப்பகுதியை கண்டு பேரதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!!

அமெரிக்காவில் கொலம்பியா எல்டோரடா விமான நிலையத்தில் மிகவும் கஷ்டப்பட்டு, நடக்கமுடியாத நிலையில் பெண் ஒருவர் மிகவும் மெதுவாக நடந்து வந்துள்ளார். இதனை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் தனக்கு காலில் பெருமளவில் அடிபட்டு விட்டதாகவும், அதனால் ஏற்படும் வலியின் காரணமாக தன்னால் நடக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனாலும் அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பெண்ணை முழுவதும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் தொடைப்பகுதியில் தையல் போடப்பட்டு இருந்தது. மேலும் அந்த தையல்போடப்பட்ட பகுதியின் உள்ளே பை போன்று ஒன்று இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பின்னர் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விமான நிலைய அதிகாரிகள் அறுவை சிகிச்சையின் மூலம் தொடைப்பகுதியில் உள்ள பொருளை வெளியே எடுத்தனர். மேலும் அதை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அது திரவ வடிவிலான கொக்கைன் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.