ஜூலை மாதம் இந்த தேதியில் பெரிய பேரழிவு ஏற்படுபோகுதாம்! இன்றுவரை 100% துல்லியமாக நடந்துள்ள ரியோ டாட்சுகி கணிப்புகள்!



future-predictions-ryo-tatsuki-july-2025-disaster

எதிர்காலம் குறித்த ஆர்வம் எல்லோரிடமும் பொதுவாகவே இருக்கிறது. அந்த வகையில், நோஸ்ட்ரடாமஸ், பாபா வாங்கா போன்றவர்கள் பல நூற்றாண்டுகளாக மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். காரணம், அவர்கள் கணித்த நிகழ்வுகள் பல இன்று நடைபெற்று வருகின்றன. இதே போன்று, இப்போது ஒரு புதிய நபர் தனது எதிர்காலக் கணிப்புகள் மூலம் புகழ் பெற்று வருகிறார்.

ரியோ டாட்சுகி 

ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி, "The Future I Saw" என்ற புத்தகத்தில் வரைகலை மூலம் எதிர்கால நிகழ்வுகளை சித்தரித்து எழுதியுள்ளார். அவரது பல கணிப்புகள் இன்று வரை 100% துல்லியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்காலம்

கடந்த கால கணிப்புகள்

ரியோ டாட்சுகி எழுதிய முக்கியமான நிகழ்வுகள்:

1999 ஆம் ஆண்டு, மார்ச் 2011ல் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என எழுதியுள்ளார்

அந்த பேரழிவு தான் டோஹோகு பூகம்பம், மார்ச் 11, 2011ல் நிகழ்ந்தது

இது சுனாமியுடன் ஏற்பட்டு பல உயிர்களை அழித்தது

இளவரசி டயானாவின் மரணம்

பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம்

COVID-19 போன்ற உலகளாவிய தொற்றுநோய் பரவல்

எதிர்காலம்

ஜூலை 2025 பேரழிவு கணிப்பு

இப்போது மக்கள் கவலையுடன் பேசும் முக்கியமான விஷயம், ஜூலை 5, 2025 அன்று ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்று அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகவல். இது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான கடலுக்கடியில் ஏற்படும் பிளவால், பூகம்பம் அல்லது சுனாமியாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! 3600°C வரை வெப்பத்தை தாங்கும் செராமிக்!

எதிர்காலம்

மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் பதட்டம்

அவரது கணிப்புகள் இதுவரை தவறவில்லையென்பதால், இந்தத் தடவையும் அவரது புத்தகத்தில் கூறிய தகவல் உண்மையாக இருக்கலாம் என மக்கள் பயத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது சாத்தியமான ஒரு முன்னறிவிப்பு மட்டுமே. பயம் கொள்ளாமல், விழிப்புடன் இருப்பதே நம்மை பாதுகாக்கும் சிறந்த வழி.

 

இதையும் படிங்க: ஹோட்டலில் காதலனுடன் உல்லாசம்! திட்டம் போட்டு பிடிக்க வந்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி செயல்!