ஹோட்டலில் காதலனுடன் உல்லாசம்! திட்டம் போட்டு பிடிக்க வந்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி செயல்!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பரோட் கோட்வாலி பகுதியில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் தனது காதலனுடன் இருந்த பெண்ணை, கணவர் போலீசாரின் உதவியுடன் பிடிக்க முயன்றதில், அந்தப் பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பியுள்ளார்.
கணவரின் திட்டம்
அந்த பெணின் கணவர், தனது மனைவியை ரகசியமாக பின்தொடர்ந்து, 112 எமர்ஜென்சி எண் மூலம் போலீசாரை அழைத்தார். பின்னர், போலீசார் ஹோட்டலுக்குள் நுழையும்போது, பெண் பயந்து, சுமார் 12 அடி உயரம் கொண்ட கூரையிலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றார்.
சிசிடிவி காட்சிகள் வைரலாகும் வீடியோ
இந்த சம்பவம் ஹோட்டலின் சிசிடிவி மற்றும் ஒரு வழிப்போக்கரின் கையில் பதிவான வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் அந்த பெண் கூரையிலிருந்து கீழே குதித்து ஓடுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
போலீசார் விசாரணை தீவிரம்
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் அந்த நபர்களிடம் அடையாள அட்டை கேட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், ஹோட்டல் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தகராறுகளும் சமூக எதிரொலியும்
தகவலின்படி, அந்த பெண் சப்ரௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். கணவன் மனைவிக்கிடையே ஏற்கனவே பல்வேறு தகராறுகள் இருந்துள்ளன. இந்த சம்பவம், ஹோட்டலின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சமூக ஒழுங்கு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தொழுகைக்கு வந்து அங்குமிங்கும் நோட்டமிட்ட வாலிபர்! அருகில் அசந்து தூங்கிய நபர்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! வெளியான சிசிடிவி காட்சி...