உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! 3600°C வரை வெப்பத்தை தாங்கும் செராமிக்!

உலக அறிவியல் துறையில் சாதனை புரிந்துள்ள சீன விஞ்ஞானிகள், 3600°C வரை வெப்பத்தை தாங்கக்கூடிய ஒரு புதிய பீங்கான் பொருளை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
முன்னணி போர் விமானங்களை மிஞ்சும் கண்டுபிடிப்பு
இதுவரை அமெரிக்காவின் F35 மற்றும் பிரான்சின் Rafale போர் விமானங்கள் மிகச்சிறந்தவை என கருதப்பட்டாலும், சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய வகை பீங்கான் பொருள், அவற்றை மிஞ்சும் திறன் கொண்டதாகும். இந்த கண்டுபிடிப்பு, உலக நாடுகளிடையே பெரும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தகவல் வெளியீடு
South China Morning Post வெளியிட்ட தகவலின்படி, தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சூ யான்ஹுய் தலைமையில் நடந்த இந்த ஆராய்ச்சியில், 3600°C வெப்பநிலையை தாங்கக்கூடிய செராமிக் பொருள் உருவாக்கப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள விண்வெளி பொருட்களை கூட அழிக்கக்கூடிய அளவிலான வெப்பநிலையைத் தாங்கும் திறனுடையது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா? இப்படி மட்டும் செய்யவே கூடாதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...
இந்த செராமிக் உருவான கலவைகள்
இந்த வெப்பநிலை எதிர்ப்பு செராமிக், ஹாஃப்னியம், டான்டலம், சிர்கோனியம் மற்றும் டங்ஸ்டன் போன்ற உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை சேர்ந்து ஒரு மிக ஸ்திரமான ஆக்ஸைடு படலத்தை உருவாக்குகின்றன. இது சூரியனின் மேற்பரப்பை நெருங்கும் வெப்பநிலையிலும் தங்கள் வடிவத்தை இழக்காமல் நிலைத்து நிற்கும் திறன் கொண்டது.
குறைந்த செலவில் மிகவுயர்ந்த சோதனை முறைகள்
பாரம்பரியமாக இவ்வாறான பொருட்கள் விமான நிலையங்கள் அல்லது ராக்கெட் சோதனை முறைகள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால் இது மிகுந்த செலவினம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களைக் கொண்டது. அதற்குப் பதிலாக, இந்த சீன குழு லேசர் அடிப்படையிலான சோதனை அமைப்பை உருவாக்கியது. இது 3800°C வரை வெப்பத்தை உருவாக்கி, சிறிய மாதிரிகளின் எதிர்வினையை நேரடி முறையில் பரிசோதிக்கிறது. இதனால் சோதனையின் போது உடைமைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முன்னோடி
இந்த புதிய கண்டுபிடிப்பு, எதிர்கால விமானங்கள், விண்வெளிக் கப்பல்கள், மற்றும் மூன்றாம் தலைமுறை ஆயுத தொழில்நுட்பங்களில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என அறிவியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி! இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்.! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!