கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
தாயுடன் பள்ளி சென்ற மகள்.. மகளை கொடு, பணத்தை எடு..! கடத்தல் கும்பல் அட்டகாசம்.. பகீர் தகவல்.!

மகளை பள்ளிக்கு அழைத்து செல்கையில், தாயை இடைமறித்து மகளை பணத்திற்கு விற்பனை செய்ய கூறி வற்புறுத்தப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள படேமூர் நகரில் Lower Meadows School அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்று வரும் தனது மகளை, பள்ளியில் கொண்டு சென்று விட தாய் மகளுடன் சென்றுள்ளார்.
இதன்போது, பெட்டி முழுவதும் பணத்துடன் நின்று கொண்டு இருந்த 3 பேர் கும்பல், தாய் - மகளிடம் பேச்சுக்கொடுத்துள்ளது. அந்த கும்பலை சார்ந்தவர், அந்த சிறுமியை எங்களிடம் தா, இதில் உள்ள பணத்தை எடுத்துச்செல். இன்னும் கூடுதல் பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள் என்று தெரிவித்துள்ளது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் - மகள் சுதாரித்துக்கொண்டு பள்ளியை கொண்டு அபயக்குரல் எழுப்பியபடியே ஓட்டம் பிடித்துள்ளனர். அங்கு இருந்த மர்ம கும்பலும் காரில் தப்பி சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாய் - மகளிடம் விசாரணை செய்து, மர்ம கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.