உலகம் சினிமா

பிரபல பாப் பாடகியை அந்த இடத்தில் தொட்ட அமெரிக்க பேராயர்; வெடித்தது சர்ச்சை

Summary:

மறைந்த பிரபல பாடகி அரிதா ஃபிராங்ளினின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட்டில் நடைபெற்றது. அப்போது பாடகி அரியானா கிராண்டே, பாடல் மூலம் புகழஞ்சலி செலுத்தினார்.

பாடல் பாடி முடிந்த பின், அவரை வாழ்த்துவதற்காக பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ் அழைத்துள்ளார். அப்போது கிராண்டேவை தாங்கி பிடித்த போது அவரது கை கிராண்டேவின் மார்பக பகுதிகளை அழுத்துவது போலிருந்தது. இதனை கண்டா அனைவரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். 

இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ், தகாத முறையில் தொட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடவில்லை என்று கூறியுள்ளார். கிராண்டேவிடமும், அவரது ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 


Advertisement