20 வயதை குறைக்க 69 வயது முதியவர் வழக்கு! காரணம் என்ன தெரியுமா?



Dutch man asked to reduce 20 years old

இதுவரை இந்த உலகத்தில் உள்ள நீதிமன்றங்கள் பல்வேறு விதமான வழக்குகளை சந்தித்துள்ளன. முதல்முறையாக நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர்கொண்டுள்ளது.

ரெளபண்ட் என்ற அந்த 69 வயது முதியவர் மனது மற்றும் உடல் அளவில் தான் இன்னும் இளமையாகவே இருப்பதாக கூறி தனது வயதினை இருபது வருடங்கள் குறைக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Dutch man

அவர் அந்த வழக்கில் குறிப்பிட்டிருப்பதாவது, "என்னுடைய பிறந்த தேதி எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய பிறந்த தேதியை 20 வருடங்கள் குறைக்க வேண்டும். நான் இன்னும் இளமையாகவே இருந்து வருகிறேன். என்னுடைய பிறந்த தேதி மார்ச் 11, 1949 ல் இருந்து மார்ச் 11, 1969 ஆக மாற்றி தர வேண்டும்" என முறையிட்டுள்ளார்.

இந்ந வழக்கை விசாரித்த நீதிபதிகள் உங்கள் வயதினை ஏன் குறைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அந்த நபர், "எனக்கு 69 வயது என்பதால் பல்வேறு தடைகள் உள்ளன. 49 வயதாக இருந்தால் என்னால் புதிய வீடு வாங்க முடியும்; விதவிதமான கார்களை ஓட்ட முடியும். இன்னும் பல வேலைகள் செய்ய முடியும் " என்று கூறியுள்ளார். 

Dutch man

மேலும் அவர் கூறிய வேறொரு முக்கியமான காரணம் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. "Tinder எனும் பிரபலமான டேட்டிங் இணையதளம் இவருக்கு 69 வயது என்பதால் இவரை உள்ளே நுழைய அனுமதிக்கவிலையாம். இதனால் இவரால் புது புது பெண் தோழிகளை பெற முடியவில்லையாம். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகள் இன்னும் 49 வயது மனிதரைப் போல தான் இருப்பதாக கூறியுள்ளனராம்" இவ்வாறு காரணங்களை கூறி அவருடைய வயதினை குறைக்க முறையிட்டுள்ளார். 

Dutch man

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, "உங்கள் 20 வருட வரலாற்றை என்ன செய்ய முடியும். அதனை எப்படி அழிப்பது" என்று கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.