வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
மனித வடிவ ரோபோ சாலையைக் கடக்கும் காட்சி! நடையிலும், தோற்றத்திலும் ஒரு மனிதனைப் போன்றே இயல்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ...
துபாயில் தொழில்நுட்ப வளர்ச்சி மீதான மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவும் ஒரு மனித வடிவ ரோபோ காட்சி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
சாலையை கடக்கும் மனித ரூப ரோபோ
இந்த வைரல் வீடியோவில், எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள ஒரு சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த காருக்கு முன்னால், ஒரு ரோபோ மெதுவாக ஓடி சாலையைக் கடக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த ரோபோவின் நடையிலும், தோற்றத்திலும் ஒரு மனிதனைப் போன்ற இயல்பு இருந்ததால், இது உண்மையில் ஒரு ரியல்டைம் ரோபோவா அல்லது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து நெட்டிசன்கள் இடையே விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெளிவான விளக்கம் இதுவரை இல்லை
இந்த வீடியோவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. இது டதுபாயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு புதிய முயற்சியா? அல்லது சுவாரசியம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கிராபிக்ஸ் காட்சியா? என பலரும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Video : மனிதர்களை போன்று பாம்பு கொட்டாவி விடும் அரிய காட்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
துபாயின் தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டும் முயற்சி?
மிகவும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நாடாக திகழும் துபாய், இதுபோன்ற முயற்சிகள் மூலம் உலக மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. அந்த வகையில் இந்த ரோபோ காட்சி உண்மையிலேயே உருவாக்கப்பட்டதா அல்லது கற்பனை காட்சியா என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது.
இவை போன்ற தொழில்நுட்ப அதிசயங்கள், நம் எதிர்கால நகர வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் வகையிலும், நம்மை சிந்திக்க வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.