BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
Health Warning: நாடி நரம்பில் கலக்கும் சோடியம்… கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.!
இன்ஸ்டன்ட் நூடுல்ஸை தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் உருவாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளம் தலைமுறையினர் பலரும் கே டிராமா, அனிமே உள்ளிட்டவைகளை கண்டு நூடுல்ஸ் மீது அதிக பிரியம் கொள்கின்றனர். இதன் காரணமாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வாங்கி சமைத்தும் சாப்பிடுகின்றனர். சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சமைக்க நேரமாகும் பட்சத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களை கொடுத்து அனுப்புவது சகஜமாகி வருகிறது.
அதிகளவு சோடியம்:
இதுபோன்ற நூடுல்ஸ்கள் மைதா மாவினை கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும். என்னதான் நாம் காய்கறிகளை சேர்த்து சமைத்தாலும் அது உடல் நலனுக்கு தீங்கை விளைவிக்கும். ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாத இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் இருக்கும் மசாலா கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக அளவிலான சோடியம் பயன்படுத்தப்படுகிறது.

உயிர் போகும் அபாயம்:
இதனைத் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்த பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்றவையும் ஏற்படும். இதனைத் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்படும். ஆசையாக இருக்கும் பட்சத்தில் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுவைக்காக சாப்பிட்டு அத்துடன் மறந்து விடுவது நல்லது.