வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
தஞ்சாவூர்: பிளஸ் 2 மாணவர் கதறக்கதற கொலை.. 15 மாணவர்கள் சேர்ந்து திட்டம் தீட்டி தாக்கிய கொடூரத்தின் அதிர்ச்சி பின்னணி.!
தஞ்சாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 12ஆம் வகுப்பு மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இங்கு பயின்று வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களை அவ்வப்போது எச்சரித்து கண்டித்து விட்டுவிட்டாலும் மாணவர்களின் மோதல் போக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
15 மாணவர்கள் சேர்ந்து தாக்குதல்:
இதனிடையே டிசம்பர் 5ஆம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நடந்த கைகலப்பில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் இணைந்து 12ஆம் வகுப்பு மாணவரை கட்டையால் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: வகுப்பறையில் சுருண்டு விழுந்து பள்ளி மாணவன் பலி... அதிக செல்போன் பயன்பாடு காரணமா.??

உயிரிழந்த மாணவரின் நண்பர் வாக்குமூலம்:
இதனை தொடர்ந்து காவல்துறையினர் 11 ஆம் வகுப்பைச் சார்ந்த 15 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இது தொடர்பாக உயிரிழந்த மாணவரின் நண்பர் தெரிவிக்கையில், "11ஆம் வகுப்பு மாணவர்கள் எனது நண்பனை அடித்து கொலை செய்துள்ளார்கள். வியாழக்கிழமை சிறப்பு வகுப்பு என்பதால் மாலை 05:30 மணிக்கு பள்ளி விடப்பட்டது.
திட்டம் தீட்டி கோரம்:
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 4.30 மணிக்கு வகுப்பு முடிந்தாலும், அவர்கள் தாக்குதல் திட்டத்துடன் காத்திருந்து வம்பு இழுத்து இந்த சம்பவத்தை நடத்தி இருக்கின்றனர்" என தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் கும்பகோணத்தை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.