BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வகுப்பறையில் சுருண்டு விழுந்து பள்ளி மாணவன் பலி... அதிக செல்போன் பயன்பாடு காரணமா.??
காஞ்சிபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேஷ் (16) கொல்லச்சேரியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 6-ம் தேதி பள்ளி சென்ற இவர் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெங்கடேஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதன் பிறகு மேல் சிகிச்சைக்காக வெங்கடேஷ் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம்..." 15 வயது மாணவன் கொலை.!! சிறுவன் கைது.!!
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் மாணவர் வெங்கடேஷ் அதிகமாக செல்போன் பயன்படுத்தியதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. விடுமுறை நாட்களில் அதிக அளவில் செல்போனை பயன்படுத்திய வெங்கடேஷ் பள்ளி செல்வதற்கு முன் தனக்கு தலைவலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பு சந்தேகிக்கிறது. எனினும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகே அவரது இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு.!! அண்ணனை அடித்து கொன்ற தம்பி.!!