ஒத்த முத்தம் கொடுத்து சாச்சிபுட்டா சார்.. பாசத்தில் கண்கலங்கும் நாய்.. வைரல் வீடியோ.!



Dogs reaction While they are kissed Video

வீடுகளில் பரவலாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக நாய்கள் உள்ளன. இவை பகல் வேளைகளில் வீட்டில் உள்ளவர்களுடன் விளையாடுவது அல்லது உறங்குவது என இருந்துவிட்டு, இரவு வேளைகளில் வீட்டை காவல் காக்கும் வேலையையும் செய்து வருகிறது. 

இவ்வாறாக வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகளை, அதனை வளர்ப்பவர்கள் கொஞ்சுவது உண்டு. அவ்வாறு கொஞ்சும் போது நாய்களும் தங்களின் பாசத்தை வெளிப்படுத்த வாலை ஆட்டிக்கொண்டு, முத்த மழையை பொழிந்து தள்ளும். சிலர் வீடுகளில் நாய்களுக்கு சோறு வைப்பதோடு சரி. வேறு எதுவும் செய்வது இல்லை. 

இந்த நிலையில், நாய்களுக்கு நாம் முத்தம் கொடுத்தால் அதன் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா?. அதுகுறித்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி இருக்கிறது. நாயின் உரிமையாளர் நாய்க்கு அன்புடன் ஒரு முத்தம் கொடுக்க, வடிவேலு பாணியில் சாச்சுப்புட்டா மச்சான் என்ற வசனத்திற்கேற்ப கண்களை மூடி நம்முடன் சாய்ந்து கொள்கிறது.