உலகம்

அதிர்ச்சி சம்பவம்: இறந்துபோன பெண் இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்து வந்த சம்பவம்..! வெலவெலத்துப்போன மக்கள்.!

Summary:

Dead woman wakes up in funeral home at Paraguay

இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பராகுவே நாட்டை சேர்ந்த கிளாடிஸ் என்ற 50 வயது பெண்மணி ஒருவர் நீண்ட காலமாக கருப்பை புற்றுநோயால் அவதிப்படுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த பெண் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் காலை 9.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து கிளாடிஸ் இறந்துவிட்டதாக காலை 11 மணியளவில் மருத்துவர் கிளாடிஸ் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். கிளாடிஸ் இறந்த சோகத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், கிளாடிஸின் உடல் சவப்பைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில் சவப்பையை கிழித்துக்கொண்டு கிளாடிஸ் அலறி அடித்து எழுந்துள்ளார். இறந்துபோனவர் திடீரென எழுந்தது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியடையவைத்து. இதனை அடுத்து கிளாடிஸ் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement