தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி; அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா...!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி; அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா...!



Crackers allowed for Diwali; A bill passed in America...

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள விதிமுறைகளுக்குட்பட்டே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 

பல நாடுகளில் தீபாவளி பண்டிகையின் போது இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கும் மசோதா மாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. 

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதனையொட்டிய காலத்தில் ஐந்து நாட்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் மாகாண பொதுவிடுமுறை பட்டியலுக்குள் தீபாவளி பண்டிகை கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.