சோபாவை சுத்தம் செய்தபோது கிடைத்த 50 வருட பழைய லெட்டர்.. பிரித்து படித்துப்பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..

வீட்டில் இருந்த பழைய சோபா ஒன்றை சுத்தம் செய்தபோது, அங்கு கிடைத்த பழைய கடிதம் ஒன்றை பார்த்த தம்பதியினர் பெரும் ஆச்சரியத்தில் உறைந்துபோயுள்ளனர்.
பொதுவாக வருங்காலம் எப்படி இருக்கும், என்னெல்லாம் நடக்கும் என பலவிதமான நம்பிக்கை கோட்பாடுகள் இன்றுவரை இருந்துதான் வருகிறது. குறிப்பாக மாயன் காலண்டர் போன்ற குறிப்புகள் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் நம்பப்படக்கூடிய ஒன்றாகாதான் உள்ளது.
அந்த வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வருங்காலம் எப்படி இருக்கும் என 11 வயது சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகிவருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதியான பீட்டர்-ரோஸ் பெக்கெர்டன் பழைய சோபா ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சோபாவின் பின்புறம் பழைய கடிதம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
உடனே அதனை தனது மனைவியிடம் காண்பித்துள்ளார். இருவரும் அந்த கடிதத்தை படித்துவிட்டு பெரும் ஆச்சரியம் அடைந்தனர். காரணம், 1969 ம் ஆண்டு பிப்ரவரி 23 என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில், வருங்காலம் எப்படி இருக்கும் என 11 வயது சிறுமி ஒருவர் தனது பள்ளி ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் பசை போன்ற உணவைத்தான் சாப்பிடுவார்கள் (பீட்ஸா) எனவும், தற்போது ரீசிவர் உள்ள போன் தான் உள்ளது, ஆனால் வருங்காலத்தில் திரையுடன் கூடிய தொலைபேசி வந்துவிடும், தொலைக்காட்சியில் மனிதர்கள் தெரிவித்துபோல், தொலைபேசியிலும் மனிதர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே மனிதர்கள் பேசுவார்கள் (வீடியோ கால்) என அந்த சிறுமி கடிதத்தில் எழுதியுள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே தற்போது உள்ள தொழில்நுட்பம் குறித்து சிறுமி எழுதி வைத்திருந்த கடிதம் தற்போது வைரலாகிவருகிறது.