பிரபாஸின் தி ராஜா சாப்.. படத்திற்கு வந்த திடீர் சிக்கல்.! என்ன நடந்தது??
புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.! விரக்தியில் கல்லூரியிலேயே மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ச்சி சம்பவம்!!

ஒடிசாவில் உள்ள பாலசோர் ஃபக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 22 வயது மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியரான சமிரா குமார் சாகு என்பவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் கல்லூரியில் புகார் குழுவில் புகார் அளித்துள்ளார்.
அவர் புகார் அளித்த நிலையில் 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு உறுதி அளித்துள்ளனர். ஆனால் அதன்பின் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி கடந்த ஜூலை 12ஆம் தேதி மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரி முன் போராட்டம் நடத்தியுள்ளார். பின் திடீரென முதல்வர் அலுவலக முன்பு நின்று தீக்குளித்துள்ளார்.
இந்நிலையில் 95% தீக்காயத்துடன் அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் மூன்று நாட்கள் உயிருக்கு போராடிய அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர், மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுப்பெண்ணிடம் முதலிரவு அன்று கர்ப்ப பரிசோதனை செய்ய சொன்ன மாப்பிள்ளை! 2 மணி நேரமாக.. என்ன காரணம்னு பாருங்க! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
இதையும் படிங்க: மகளின் சின்ன ஆசையை நிறைவேற்ற போன தந்தை! இப்படியா நடக்கணும்! அப்பாவ காணல.. கதறி அழுத சிறுமி.. பதறவைக்கும் வீடியோ!