புண்கள் ஆறும் போது கடுமையான "அரிப்பு" ஏற்படுவது ஏன் தெரியுமா.?!

புண்கள் ஆறும் போது "அரிப்பு" ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் நடைபெறும் சிகிச்சை செயல்முறை தான்.
சரும புதுப்பிப்பு (Skin regeneration):
புண் ஆறும்போது புதிய தோல் உருவாகிறது. இந்த புதுப்பிப்பு செயல்முறையானது அரிப்பை ஏற்படுத்தும்.
நரம்பு முனைகளில் மாற்றம் (Nerve endings) :
புண் பகுதியில் இருக்கக்கூடிய நரம்புகள் மீண்டும் உருவாகிறது. இதனால், அசாதாரண உணர்வுகள் (அரிப்பு போன்ற உணர்வு) ஏற்படலாம்.
இரத்த ஓட்டம் (Blood flow increase):
காயமுள்ள இடத்தில் இருக்கும் புண்கள் ஆறுவதற்கு தேவையான சத்துக்கள் மற்றும் உயிரணுக்களை உடலானது அனுப்புகிறது. இதன், காரணமாக அந்த பகுதியில் சற்று அதிகப்படியான உணர்ச்சி (sensitivity) ஏற்படும் போது, அரிப்பு தோன்றுகின்றது.
தோல் வறட்சி (Dryness):
சில சமயங்களில் புண் இருக்கக்கூடிய பகுதிகளில் தோல் உலரக்கூடும். இதனால், அங்கே அரிப்பு ஏற்படலாம்.
எச்சரிக்கை:
சில நேரங்களில் புண் இருக்கும் இடத்தில் வெப்பமாக உணர்ந்தாலோ அல்லது சிவந்து, மிகவும் அரிக்கிறது என்றாலோ அல்லது அரிப்புடன் கூடிய வெள்ளை திரவம் வெளி வந்தாலோ அது தொற்று ஏற்ப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம். அந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
அரிப்பை குறைக்க வழிகள்:
மெதுவாக தண்ணீரில் கழுவி, அந்த இடத்தை குளிர்ந்த பஞ்சு கொண்டு துடைக்கலாம். அதன்பின், (moisturizer), அல்லது மருத்துவர்களின் அறிவுரையில் களிம்பு மருந்து (ointment) பயன்படுத்தலாம்.