கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ‘தல’ என அழைக்கப்படும் நடிகர் அஜித், 90களிலிருந்து இன்றுவரை தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். காதல் மன்னன், வில்லன், ஆக்ஷன் ஹீரோ என பல விதமான கதாபாத்திரங்களில் முத்திரை பதித்து உள்ளார்.
இந்நேரம் வரை அஜித் நடித்த 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான Good Bad Ugly படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடுத்த படமான AK 64 திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
அஜித்தின் சொத்து மதிப்பு விவரம்
இணையத்தில் தற்போது அஜித் சொத்துக்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. சென்னையில் பல கோடி மதிப்பிலான வீடு, மற்றும் துபாயில் சொகுசு வீடு அவரிடம் உள்ளது.
அஜித் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் கொண்டவர் என்பதால், பல சொகுசு கார்கள் அவரிடம் உள்ளன. ரேடியோ சிட்டி அறிக்கையின்படி:
லம்போர்கினி, ₹34 கோடி மதிப்புள்ள BMW 7 Series
BMW 740Li – ₹1.5 கோடி
Land Rover Discovery – ₹1.30 கோடி
Ferrari 458 Italia – ₹4 கோடி
மேலும், சுற்றுப்பயணங்களுக்கு ₹22 லட்சம் மதிப்புள்ள BMW R 1250 GS Adventure பைக் பயன்படுத்துகிறார்.
வணிகம் மற்றும் முதலீடுகள் மூலமும் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் அஜித், தற்போது ₹350 முதல் ₹400 கோடி மதிப்பிலான சொத்துகள் கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Video : குத்தாட்டம் போட்ட நடிகர் ஜெயம்ரவி ! அதுவும் உடல் மெலிந்து ஆளே மாறிப்போய் உள்ளார் பாருங்க! வைரலாகும் குத்தாட்ட வீடியோ இதோ!