Video : குத்தாட்டம் போட்ட நடிகர் ஜெயம்ரவி ! அதுவும் உடல் மெலிந்து ஆளே மாறிப்போய் உள்ளார் பாருங்க! வைரலாகும் குத்தாட்ட வீடியோ இதோ!



ravi-mohan-makkamishi-song-video-viral

 நடிகர் ரவி மோகன் நடித்த 'பிரதர்' படத்தில் இடம்பெற்ற 'மக்காமிஷி' பாடலுக்கு அவர் நடனமாடும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதும், அது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

தற்போது, சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' திரைப்படத்தில் ரவிமோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெனி’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ரவி மோகன் video

மேலும், இயக்குநர் ராஜா அவர்களின் ‘தனி ஒருவன் 2’ படத்திலும் ரவிமோகன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் திரையுலகத்தில் பரவியுள்ளது.

இதையும் படிங்க: குடும்பத்தில் நடந்த கலவரம்.. அவன் ஏன் புருஷன் இல்லை! உண்மையை போட்டு உடைக்கும் அரசி! பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பங்களுடன் உள்ள புரோமோ..

இந்நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் தென்னிந்திய திரையுலகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் காரணமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில், ரவிமோகனும் கெனிஷாவும் ஜோடியாக கைக்கோர்த்தபடி வந்ததால் சர்ச்சை மேலும் பெருகியது.

ரவி மோகன் video

இந்த விவகாரம் இன்னும் தீர்வுக்கு வராத சூழலில், தற்போது ‘மக்காமிஷி’ வீடியோ மீண்டும் ரவிமோகனை இணையத்தில் மத்தியிலே கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: சாமி பட வில்லன், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்....