மரணித்த குழந்தை.. உயிருடன் பிறந்த அதிசயம்.. GH மருத்துவர்கள் அலட்சியம்.!



Mathya pradesh general hospital makes false diagnosis for pregnancy women

இறந்த குழந்தை உயிருடன் பிறந்த அதிசயம்

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அமர்பதான் பொதுமருத்துவமனையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி சகேரா பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற கர்ப்பிணி இளம்பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மருத்துவர்களின் அலட்சியம்

அங்கே Doppler ஸ்கேன் செய்து குழந்தையின் நிலையை பரிசோதித்த மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால், இதை நம்ப மறுத்த துர்காவின் உறவினர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே துர்கா அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இளம் ஜோடி! அம்மா அப்பா இல்லை! திடீரென நெஞ்சை பிடித்து விழுந்த கணவர்! பதறிய மனைவி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

government hospital

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே, பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை கேள்வி குறியாக இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அதை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே, அரசு மருத்துவமனையை ஒழுங்குபடுத்தும் விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவிலில் திருட வந்தவரை தூங்க வைத்த சாமி! மறுநாள் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ...