"நான் அனாதை" அனுதாபத்தை நம்பி மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர்.. செல்போனில் அம்பலமான அந்தரங்க உண்மை.! 



Man Posing as an Orphan Arrested for Deceiving Family Into Marriage, Phone Reveals Shocking Truth

மதத்தை மாற்றி, தன்னை அனாதை என அடையாளப்படுத்திய இளைஞர், ஒருகட்டத்தில் உண்மை அம்பலமாகி அடி-உதை தாங்க இயலாமல் அனைத்தையும் வெளிச்சப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. 

தர்காவுக்குச் சென்றனர்: 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், துப்ரான், குண்டெரெட்டி பள்ளியில் வசித்து வருபவர் மண்ணே (வயது 60). இவரின் மனைவி சுஜாதா (வயது 55). தம்பதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச்சால் மாவட்டத்தில் இருக்கும் கவுகூர் தர்காவுக்கு சென்று வந்துள்ளனர். 

இதையும் படிங்க: பள்ளி வளாகத்திலேயே கொடூரம்.. 20 இடங்களில் சரமாரி குத்து.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்.! 

அறிமுகம்: 

அச்சமயம், அங்கு வந்த ஹேமந்த் என்ற நபர் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டு, தனக்கு யாரும் இல்லை எனவும், அனாதை எனவும் கூறி இருக்கிறார். தம்பதிகளிடம் நல்லபடியாக பேசி இருந்துள்ளார். பின் தம்பதியுடன் சென்றவர், அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். குடும்பமாக தங்கி இருந்த நிலையில், மண்ணேவின் இரண்டாவது மகளை காதலித்து இருக்கிறார். 

Crime news

திருமணம்: 

ஒருகட்டத்தில் இருவருக்கும் பெற்றோர் சேர்ந்து திருமணம் செய்து வைத்த நிலையில், ஹேமந்த்தின் நடத்தையில் அவரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், வேலை விஷயம் என்று கூறி ஹேமந்த் மியாபூருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் கணவரின் செயல்பாடுகளை மனைவி கண்காணிக்கவே, அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

தகாத உறவு: 

ஒருகட்டத்தில் கணவரின் செல்போனை சோதித்தபோது, அவர் பல பெண்களுடன் தகாத முறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கணவரிடம் கேட்டபோது தகராறு உண்டாகி இருக்கிறது. பின் ஹேமந்த் கிராமத்தை விட்டு தப்பிச் சென்றார். 

Crime news

தாக்குதல்: 

பின் நேற்று மீண்டும் கிராமத்துக்கு வந்த ஹேமந்தை, அவரின் மனைவி கிராம மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதனால் ஹேமந்த் மீது ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். ஒருகட்டத்தில் அடி தாங்க முடியாத ஹேமந்த் உண்மையை கக்கி இருக்கிறார். 

ஏமாற்றி திருமணம்: 

அதாவது ஹேமந்த்துக்கு தாய், தம்பி இருப்பது தெரியவந்தது. மேலும், அதிர்ச்சிதரும் விஷயமாக, ஹேமந்த் உண்மையில் நாசர், அதாவது மாற்று மதத்தை சேர்ந்தவர் என்ற உண்மையை கூறி இருக்கிறார். பின் இதுதொடர்பாக மண்ணேவின் மகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஹேமந்த் என்ற நாசர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: ஆசிரியயை வெளியே கூப்பிட்ட மர்ம நபர்! அடுத்த நொடி ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...! பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்....!!!