என்கிட்டயே உன் ஆட்டத்தை காட்டுறியா...! நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு நாகங்கள்...! இறுதியில் நடந்த அந்த திகில் காட்சியை நீங்களே பாருங்க..!!!



king-cobra-attacks-indian-cobra-viral-video

வீட்டின் தாழ்வாரப் பகுதியில் இரண்டு ஆபத்தான பாம்புகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரம்மாண்டமான ராஜ நாகம், அதற்கு எதிரே இருந்த சிறிய இந்திய நாகத்தை திடீரென தாக்கியது. காயமடைந்த பாம்பு உயிருக்கு போராடும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

நேருக்கு நேர் நின்ற இரு நாகங்கள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஃபி அகமது என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பெரிய உடல்வாகுடன் காணப்படும் ராஜ நாகம் ஆவேசமாக நின்றுகொண்டிருக்கிறது. அதன் எதிரே சிறிய இந்திய நாகம் படத்தை விரித்தபடி தற்காப்பு நிலையில் இருந்தது. சில நொடிகள் இரு பாம்புகளும் ஒன்றையொன்று எதிர்த்து நின்ற நிலையில், அடுத்து நடந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க: SeeEx நேரலையிலையே இப்படியா? இரவில் பிரபல ஸ்டீரீமர் டிரைகோ பெண்ணை அடித்து, பால் பாட்டிலால் தாக்கிய கொடூரம்! தீயாய் பரவும் வீடியோ..!!!

மின்னல் வேகத்தில் தாக்கிய ராஜ நாகம்

திடீரென ராஜ நாகம் வேகமாக முன்னேறி சிறிய நாகத்தை தாக்கியது. தாக்குதலின் வேகத்தை சமாளிக்க முடியாமல் அந்தப் பாம்பு தரையில் துடித்தது. தாக்கிய பிறகு ராஜ நாகம் மறுபுறம் திரும்பிச் சென்ற நிலையில், காயமடைந்த நாகம் அசைவுகளுடன் போராடிக்கொண்டிருந்தது.

மனிதர் வந்ததும் மீண்டும் பரபரப்பு

இதையடுத்து பாம்பை பிடிப்பதற்காக ஒருவர் அங்கு ஓடிவந்தார். மனிதர்களின் நடமாட்டத்தை கண்டதும் காயமடைந்த சிறிய நாகம் அச்சத்தில் அங்குமிங்கும் வேகமாக நகரத் தொடங்கியது. பின்னர் வீடியோ முடிவடைகிறது. இதனால் அந்த இந்திய நாகம் உயிர் பிழைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த காட்சியை பார்த்த பலரும் அதன் நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நூறு கோடியில் ஒரு வாய்ப்பு! வெவ்வேறு திசைகளில் பயணித்து சென்ற தந்தை- மகன்..! நடுக்கடலில் நடந்த அந்த க்ளைமாக்ஸ் சீன்... நெகிழ்ச்சி வீடியோ..!!!