அடுத்த ஆப்பு ஆரம்பம்.. பீதியில் தவெக..? ஆட்சியைக் காப்பாற்ற டெல்லி பறந்த விஜய்! அடுத்து திமுக ஆட்சி தான்... ஸ்டாலின் போட்ட வெடிகுண்டு..!!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே ஆன நிலையில், தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்த முதலமைச்சர் விஜய் டெல்லியில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதே இந்த நகர்வுகளின் நோக்கம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளுடன் விஜய் ஆலோசனை?
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விஜய் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னணியில் அரசியல் ஆலோசனைகளும் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தமிழக காங்கிரஸ் கூட்டணியிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING : தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிப்பு! அதிகாலையிலேயே அதிரடி காட்டின CM விஜய்...! தொண்டர்களுக்கு கட்சி தலைமை போட்ட உத்தரவு...!!!
இதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் எந்தவித விரிசலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்தச் சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இடதுசாரி கட்சிகளிடமும் ஆதரவு திரட்டும் முயற்சி
அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளுடனும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்ய ஆதவ் அர்ஜுனா, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் தேசியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு சிதறாமல் பார்த்துக்கொள்வதுடன், வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான பலத்தை உறுதிப்படுத்தவும் தவெக தலைமை முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் - ஸ்டாலின் பேச்சு
இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தவெக அரசின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். தற்போதைய நிர்வாகச் சூழலில் தன்னை இன்னும் முதலமைச்சர் என்று அழைப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுபுறம், எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ள தவெக தலைமையும் தயாராகி வருகிறது. ஏற்கெனவே மாமல்லபுரத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் வியூகங்களில் சிக்காமல் இருக்க விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனும் தெரிவித்துள்ளார்.
சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை உறுதிப்படுத்துவதுடன், கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தவெக தலைமை இறங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக சட்டமன்ற அரசியலில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 9 நிமிட வீடியோக்கு தவெக கொடுத்த தரமான பதிலடி! தமிழக அரசியலில் வெடித்த அடுத்த பூகம்பம்..!!!